
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளை தக்காளி வடிவ கேக் வெட்டி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் 50-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அக்கட்சித் தொண்டர்கள் தக்காளி வடிவிலான கேக் வெட்டி விநோகமாக கொண்டாடினர்.
இதுகுறித்து தொண்டர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் அகிலேஷ் யாதவின் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு விலைவாசி உயர்வு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. இக்கொண்டாட்டத்திற்கு நாங்கள் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியிருக்கலாம். ஆனால் இனிப்புகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் தக்காளியும் கிலோ 120 ரூபாயாக உள்ளது. அதன் காரணமாக மக்களுக்கு இந்த ஆண்டு நாங்கள் தக்காளியை வழங்குகிறோம். இந்தியாவெங்கும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதை உணர்த்தும் விதமாக தக்காளி வடிவிலான கேக் வெட்டப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:புழல் சிறையில் கேரம் விளையாட்டால் வந்த வினை!