
உயிரிழந்த தேனியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஸ்வரன் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் பத்தின்டா பாத் ராணுவ முகாமில் எதிர்பாராத விதமாக நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். அதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் குமார் என்பவர் ஒருவராவார். அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் மூனாண்டிபட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குடும்பத்தினர் மரியாதை செலுத்த வைக்கப்பட உள்ளது. இறுதி அஞ்சலி இன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.