“ஐந்து ஆண்டுகளில் வரவேண்டிய அதிருப்தியும் கெட்ட பெயரும்....” டிடிவி தினகரன்!!

“ஐந்து ஆண்டுகளில் வரவேண்டிய அதிருப்தியும் கெட்ட பெயரும்....” டிடிவி தினகரன்!!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள  பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் , ரமலான் பண்டிகையை  முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மஹாலில் நடைபெற்றது. 

இதில் அமமுகவின் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.  நிகழ்ச்சியில், அமமுக கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில்  இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிக்கைக்கான  அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.  இதில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், அமமுகவினர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். 

அதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் மாநில கட்சிகளை ஒருபோதும் அழித்து விட முடியாது எனவும் உலகம் முழுவதும் டெக்னாலஜி வளர்ந்ததால் பயங்கரவாதத்தின் பாதிப்பு அதிகமாவதால் உலகம் முழுவதும் வாழ்கின்ற மக்கள் சகோதர மனப்பான்மையுடன் இருந்தால் மட்டுமே இதனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.  

மேலும் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுவதை மக்களோடு மக்களாக பார்ப்பதாகவும் திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வரவேண்டிய அதிருப்தியும் கெட்ட பெயரும் ஆட்சிக்கு வந்த 22 மாதங்களில் வந்துவிட்டதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com