ஏலக்காய் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!!

ஏலக்காய் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!!

ஒரே வாரத்தில் 800 ருபாய் விலை உயர்ந்த ஏலக்காய் 1800 முதல் 2000 வரை விற்பனையாவதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏலக்காய் வர்த்தகத்தில் இந்தியாவின் முதன்மை நகரமாகவும் ஏலக்காயின் தலைநகராகவும் போடிநாயக்கனூர் திகழ்ந்து வருகிறது.  கேரள இடுக்கி மாவட்டங்களில் உற்பத்தியாகும் ஏலக்காய் களை போடி பகுதியில் உள்ள ஸ்பைசஸ் போர்டு தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் ஏலக்காய்க்கு உலகளவில் மவுசு அதிகம். 

ஸ்பைசஸ் போர்டு மூலம் ஏலம் எடுக்கப்பட்ட ஏலக்காய்கள் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏலக்காய் தரம் பிரிக்கும் கடைகள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.   இந்த தொழிலை நம்பி சுமார் 10,000 மேற்பட்ட விவசாய வர்த்தக குடும்பங்கள் போடி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காயின் விலை ஆயிரத்துக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரத்தில் 800 ரூபாய் வர விலை உயர்ந்து 1800 ரூபாய் முதல் 2000 வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோவுக்கு 800 ரூபாய் வரை செலவழித்து விவசாயிகள் ஏலக்காய் விளைவித்து வரும் நிலையில் 1200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் தான் விவசாயிகள் குறிப்பிட்ட லாபத்தை அடைய முடியும். தற்போது 1800 முதல் 2000 வரை விற்பனை நடைபெற்று வருவதால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக நஷ்டத்தை சந்தித்து வந்த விவசாயிகளுக்கு தற்போது அதனை ஈடு கட்டுவதற்கு சற்றே ஆறுதலாக இந்த விலை உயர்வு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க || "உண்மையைப் பேசிய பி.டி.ஆர்-க்கு அமைச்சரவை மாற்றம்" அண்ணாமலை விமர்சனம்!!