பருத்தி கொள்முதல்; ரூ.8000 வழங்க விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி  கொள்முதல்; ரூ.8000 வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Published on
Updated on
2 min read

சீர்காழியில் பருத்திக்கு உரிய விலை வழங்கக்கோரி மழையில் நனைந்தபடியே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பருத்தி கொள்முதல் விலையாக குவின்டாலுக்கு 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால் ஒழுங்குமுறை கூடத்தில் வெளியே வைக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள் மழையில் நனைய தொடங்கின. இதனால் அங்கிருந்த விவசாயிகள் கவலை அடைந்தனர். இதைத் தொடர்ந்து கொட்டும் மழையிலும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகளுக்கு  உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து தரக் கோரியும், குவின்டாலுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையான குவிண்டாலுக்கு ரூபாய் 8000 வழங்கக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை பாதுகாக்க அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக ஒழுங்குமுறை கூட்டத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com