அண்ணாமலையின் பொய்க் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ளும்.....!!

அண்ணாமலையின் பொய்க் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ளும்.....!!
Published on
Updated on
1 min read

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பொய்க் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ளும், அதற்குரிய வழக்குகளை திமுக தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் தொடரப்படும் என அக்கட்சியின் சட்ட துறை செயலாளரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சட்டத் துறையின் சார்பாக ஒன்றியமும், மாநிலங்களும் என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது.

அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி கே எஸ் இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர் இளங்கோ, ரவிச்சந்திரன், தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர் இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார், அதில் அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டி மண்டல வாரியாக நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

அண்ணாமலையின் பொய்க்குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ளும் எனவும் அதற்குரிய வழக்குகள் திமுக தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் தொடரப்படும் என திமுகவின் சட்ட துறை செயலாளரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com