நிர்வாகத்தின் அஜாக்கிரதையால்,.. 58 மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் மாயம்....!

நிர்வாகத்தின் அஜாக்கிரதையால்,..   58 மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் மாயம்....!

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில், 58 மாணவியரின் மதிப்பெண் சான்றிதழ் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிராட்வேயில் பாரதி அரசு  மகளிர் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் வடசென்னை சேர்ந்த ஏழை எளிய கூலி தொழிலாளிகளின் மகள்கள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டுள்ளது. என்ன நிலையில் கல்லூரி நிர்வாகம் பீரோவில் இருந்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்த போது அதில் 58 மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ் மாயமானது தெரியவந்துள்ளது.

தற்போது பாரதி அரசு மகளிர் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன பல்வேறு ஆவணங்கள் பழைய கட்டிடத்தில் இருந்து வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது இந்நிலையில் பீரோவில் வைக்கப்பட்ட மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போனது குறித்து  இந்த கல்லூரியின் சார்பில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க     | பாடமாகிறது சாவர்க்கரின் வரலாறு !   

கொரோனா தொற்று பரவல் காலத்தில்  மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் பீரோவில் வைக்கப்பட்டதாகவும் அதன் பிறகு தற்போது தான் திறக்கப்பட்டதாகவும், இதில் 58 மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாயமான மதிப்பெண் சான்றிதழ் மாயமானது கல்லூரி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் என தெரியவந்துள்ளது. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிக்க     | " எந்த இடத்தில் யாரை வைக்க வேண்டும் என்பதில் கேப்டன் தோனியை போலதான் ஸ்டாலினும்..... "