ஐந்தறிவு கொண்ட உயிரினத்திற்கு கூட .... பாஜகவை குறித்து...!!

ஐந்தறிவு கொண்ட உயிரினத்திற்கு கூட .... பாஜகவை குறித்து...!!

குரங்கு குட்டிக் கதை கூறி பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

இந்த விழாவின் போது பொதுமக்கள் மத்தியில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், “தனது வீட்டில் தினசரி ஒரு குரங்கு வந்து தொல்லை செய்யும், பழங்கள் மற்றும் உணவு குடுத்து விட்டு அதை விரட்டினாலும் போகாது எனவும் தான் பத்து நாட்கள் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்த போது அந்த குரங்கைக் காணவில்லை எனவும், பின்னர் அந்த குரங்கு குறித்து விசாரித்த போது, வீட்டின் மேலே ஒரு சிறிய கட்டிட வேலை நடைபெற்றது, அதற்காக கொண்டு வந்த வலை உள்ளிட்ட பொருட்களை பார்த்து தன்னை பிடிக்கத்தான் வலை கொண்டு வருகிறார்கள் என்று எண்ணி அங்கிருந்து ஓடி விட்டது எனவும், ஐந்தறிவு கொண்ட உயிரினத்திற்கு கூட தனக்கு ஆபத்து வரப் போகிறது என தெரிந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறது” எனப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து “அதேபோலதான் பாஜக பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நமக்கு தெரிகிறது.  அதனால் பாஜகவை எதிர்த்து போராட வேண்டும்.  பாஜக வீசும் வலைகளில் சிக்கி விடக் கூடாது.” என்று அறிவுரை கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை... மின்சார வாரியம்!!