தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறையில்....!!!

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறையில்....!!!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.  இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்து, ஆய்வகத்தை பார்வையிட்டு கணினிகளை இயக்கி மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

ஆங்கில புலமை:

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது.  2023-24-ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுகிறது.  மாநிலம் முழுவதிலும் ரூ.23 கோடி பட்ஜெட்டில் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள மொத்தம் 89,680 செயல்படும் நிலையில் உள்ள கணினிகள் மொழி ஆய்வகங்களாக செயல்படும்.  

முதல் முறையாக:

இந்த மொழி ஆய்வகங்களின் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.  இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது.  இந்த ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். 

உரையாடல்:

தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வகத்தில் உள்ள கணினியை இயக்கி பார்த்து மாணவர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எம் பி ராமலிங்கம் எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com