ராசிபுரம் தும்பல்பட்டி பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி...!!

ராசிபுரம் தும்பல்பட்டி பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி...!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பல்பட்டி பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது  .இந்த நிலையில் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக வனத்துறை  அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்றவுடன் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  

போட்டியில் சேலம், நாமக்கல்,திருச்சி, கரூர்,தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை அளித்த பிறகு போட்டியில் களமிறங்கினர். 

வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கினார்.  மேலும் மாடுபிடி வீரர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி,சில்வர், மிக்ஸி,கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டது.  ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.  போட்டி நடைபெறும் இடத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:  நாட்டின் அரசராக விளங்கும் பிரதமர்..!!