தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் மீண்டும் கன்டிசன் போடும் உயர்நீதிமன்றம்

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை  எடுக்கப்படும் மீண்டும்  கன்டிசன் போடும்  உயர்நீதிமன்றம்

அதிகமான கட்டணம்

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்,திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்ள் வெளியாகும் போது,  கூடுதல் கட்டணம் வசூலிக்கும்  திரையரங்கங்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர்  உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு 2017ம் ஆண்டுகளில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Theatre chains mull cheaper tickets to draw viewers | Mint

பதில் மனு 

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

மேலும் படிக்க | இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு

இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு , கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பட்டியலை தாக்கல் செய்யப்பட்டது.

உரிய நடவடிக்கை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் , அரசு
நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக  உயர் நீதிமன்ற ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும் என்றும், சினிமா டிக்கெட் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.