ம.சுப்ரமணியனுக்கு மாரத்தான் டிபார்ட்மென்ட்-ஐ கொடுத்திருந்தால் ஓடிக்கொண்டே இருந்திருப்பார்...! - ஜெயக்குமார்.

ம.சுப்ரமணியனுக்கு மாரத்தான் டிபார்ட்மென்ட்-ஐ கொடுத்திருந்தால் ஓடிக்கொண்டே இருந்திருப்பார்...! - ஜெயக்குமார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
அங்கு செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகத்தில் மருத்துவத்துறை என்ற துறை இருக்கிறதா என்றே தெரியவில்லை. அமைச்சர் மா.சு. விற்கு மாரத்தான் என்ற டிபார்ட்மெண்ட்டை உருவாக்கி கொடுக்கலாம் என்றும், அந்த மாரத்தான் டிபார்ட்மெண்டுக்கு அவரை அமைச்சராக போட்டிருந்தால் ஓடிக்கொண்டே இருந்திருப்பார் எனவும் அவரை மருத்துவத் துறையை பார்க்க வேண்டும் என்று சொன்னால் எப்படி பார்ப்பார்? எனவும் விமர்சித்தார்.  

இதையும் படிக்க | அண்ணாமலைக்கு உதயநிதி நோட்டீஸ்...!

மேலும், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடும், மருத்துவர்கள் தட்டுப்பாடும் உள்ளதாகவும், இந்த அரசாங்கமே போலி அப்புறம் எப்படி போலி மருத்துவர்கள் ஒழிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகளும், மருத்துமுறைகளும் இருப்பதால் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிட்டார்கள் எனவும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கட்ட அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்பட்டதே போலி மருத்துவர்கள் அதிகரிப்பதற்கு காரணம் எனவும் கூறினார்.

இதையும் படிக்க | சமாதானத்திட்டம் குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் - அமைச்சர் மூர்த்தி பதிலுரை!