மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே - வாழ்த்தோடு இபிஎஸ்க்கு வகுப்பெடுத்த திருமா!

மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே - வாழ்த்தோடு  இபிஎஸ்க்கு  வகுப்பெடுத்த திருமா!


 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் , வாழ்த்தோடு சேர்ந்து அட்வைஸும்  செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | இதுக்கு முடிவே இல்லையே...’மீண்டும் சட்டப்போராட்டம் நடத்துவோம்...’ ஓபிஎஸ் வழக்கறிஞர்!!

தொல். திருமாவளவன் ட்விட் .

தீர்ப்பு வெளியான நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி  இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’ என தெரிவித்துள்ளார்.