மதுபானங்களின் விலை இன்று முதல் அதிரடி உயர்வு...! -

மதுபானங்களின் விலை இன்று முதல் அதிரடி உயர்வு...! -

தமிழ்நாட்டில் இன்று முதல் மதுபானங்களின் விலையை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 

அரசு மதுபானக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச விலையை விட 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப் படுவதாக சர்ச்சை பல நாட்களாக எழுந்து வந்துள்ளது. மதுபானக் கடைகளில் 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும்போது அதனை எதிர்த்து மதுப்பிரியர்கள் மதுபானக் கடை விற்பனையாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாளர் விசாகன் ஐஏஎஸ் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். அச்சுற்றறிக்கையில் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது, 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கும் அதேவேளையில்,

மதுபானங்களின் விலையை அதிகப்படுத்தியிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம்.,...  

அதாவது,  வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின்  விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம். குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு 320 ரூபாய் வரை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 

மேலும், மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறது. 

இப்படி சமீப காலமாகவே பெரும் பேசுபொருளாக இருந்து வந்த 10 ரூபாய் விலை உயர்வு மீதான நடவடிக்கை எடுப்பதுபோல ஒருபுறம் கூறிவிட்டு, மறுபுறம் மதுபானங்களின் விலையை உயர்த்தி விற்பது  வெரும் கண் துடைப்பு வேலை தான் என்றும், இதனால் எந்த பயனும் இல்லை எனவும், பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இதையும் படிக்க    | மகளிர் உரிமைத் தொகை : நாளை முதல் வீடு தோறும் டோக்கன் விநியோகம் !