”தாய்க்கு ஈடு இணை இல்லை என்பதால்....” நெகிழ்ச்சியாக இரங்கலை தெரிவித்த மம்தா பானர்ஜி!!

பணிக்கான அர்ப்பணிப்பு மற்றும் நாட்டின் மீதான அர்ப்பணிப்புக்கான தனித்துவமான உதாரணத்தை முன்வைத்தார் பிரதமர் மோடி.

”தாய்க்கு ஈடு இணை இல்லை என்பதால்....” நெகிழ்ச்சியாக இரங்கலை தெரிவித்த மம்தா பானர்ஜி!!

பிரதமர் மோடி வங்காளத்திற்கு சென்று கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவிருந்தார். ஆனால் அவரது தாயார் இன்று அதிகாலை காலமானதால் அவரால் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனினும், கொல்கத்தா-ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும் தெரிந்துகொள்க:  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மரணம்..! 

காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி, ”மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே இன்று உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சோகமான நாள், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இது ஒரு பெரிய இழப்பு. உங்கள் செயல்களாலும் செயல்பாடுகளாலும் உங்கள் தாயை நீங்கள் நேசிக்கும் உங்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என கூறியுள்ளார்.  மேலும், “ இன்று நீங்கள் மேற்கு வங்காளத்திற்கு வர வேண்டியிருந்தது. ஆனால் தாய் இறந்ததால் வர இயலவில்லை.  இருந்தபோதிலும், நீங்கள் காணொலி காட்சி வழியாக திட்டத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள்.  இதற்காக மேற்கு வங்காள மக்கள் சார்பாக நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிந்துகொள்க:  சமாதானமாக மறுத்த மம்தா பானர்ஜி....எதற்காக பாஜகவினரின் இந்த சமாதான முயற்சி?!!

தொடர்ந்து பேசிய மம்தா, ”நீங்கள் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.  தாய்க்கு ஈடு இணை இல்லை என்பதால், உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இரங்கலை எவ்வாறு தெரிவிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் அம்மா எங்களுக்கும் அம்மாதான். நான் என் அம்மாவையும் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். உங்கள் பணி தொடர கடவுள் உங்களுக்கு பலத்தை தரட்டும்” என்று கூறியுள்ளார். 

இதையும் படிக்க:  இந்தியாவில் அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!!