
ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் , சரக்கு ரயில், மற்றும் யஸ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில், பாலசோரில் தடம்புரண்ட 21 ரயில் பெட்டிகளை தண்டவாளத்திலிருந்து அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க, தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளும், துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மீட்பு பணியை மேலும் வேகப்படுத்துவது உள்ளிட்டவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்.