கட்சியின் கொள்கைக்கு விரோதம் : தமிமுன் அன்சாரி அதிரடி நீக்கம்!!!

கட்சியின் கொள்கைக்கு விரோதம் : தமிமுன் அன்சாரி அதிரடி நீக்கம்!!!

கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அனாசாரியை அதிரடி நீக்கம் செய்து திண்டுக்கல்லில் நடைபெற்ற தலைமை பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது  

மேலும் படிக்க | கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவித்த அரசு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம்

திண்டுக்கல் திருச்சி சாலை, கோவிலூர் பிரிவு அருகே தனியார் மண்டபத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் சம்சுதீன் நாசர் உமரி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் 32 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொது செயலாளராக ஹருன்  ரசீது நியமனம் செய்தும், தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வரும் வடமாநில நபர்களின்  வருகையை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். bbc நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையை ஏவிய ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

மேலும் படிக்க | முதலமைச்சரை சந்தித்த போது - நாடக காதல் தொடர்பாக இப்போது பேச விரும்பவில்லை பாமக பேச்சு

கட்சியின் கொள்கைக்கு விரோதம்

தொடர்ந்து  பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய புதிய பொதுச் செயலாளர் அருண் ரசீது, கட்சியின் பொதுச் செயலாளராகவும், முன்னால் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த தமிமுன் அன்சாரி,  கட்சியின் கொள்கைக்கு விரோதமாகவும், கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவதால்  ஆறு மாத காலத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்தார்.