கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர் உயர்வு...! மக்கள் அவதி...!

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர் உயர்வு...!   மக்கள் அவதி...!

கோயம்பேடு அங்காடியில் காய்கறி விலை தொடர் உயர்வு  நீடிப்பதால்  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதியில் உள்ளனர். 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை காலம் ஆரம்பித்தாலும் காய்கறி விலையில் பெரிய அளவில் விலை உயர்வு இல்லாமலேயே இருந்தது. எலுமிச்சை, இஞ்சி, பச்சைப்பட்டாணி போன்றவை மட்டும் உச்சத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே காய்கறியில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் கிலோ 10 முதல் 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Corpn. to develop Nethaji daily market - The Hindu

பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கும், பட்டாணி கிலோ 200 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..அதேபோல் கத்திரிக்காய் கிலோ 60-65 ரூபாய்க்கும், அவரைக்காய் 60 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், காய்கறி விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்திருப்பதுதான் விலை உயர்வுக்கு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க      | ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன..? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.