மனநலம் பாதித்தவரைக் கட்டி வைத்து அடித்த மக்கள்...!!!

மனநலம் பாதித்தவரைக் கட்டி வைத்து அடித்த மக்கள்...!!!
Published on
Updated on
1 min read

மனநலம் பாதித்தவரை கிராமத்தினர் கம்பால்  தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  அரவிந்தன்.  அவர்து வயது 30 எனவும் மனநலம் பாதித்தவர் எனவும் கூறப்படுகிறது.  இவர் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள கோயில் சிலைகளை சேதப்படுத்தியதாக  மக்கள் அவரைக் கண்டித்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் அவர்களை தாக்கியதோடு கற்களை கொண்டும் எறிந்துள்ளார். 

இதனால் மக்கள் அவரை விரட்டியுள்ளனர்.  அவர் ஊரை விட்டு ஓடியுள்ளார்.  இந்நிலையில் நேற்று ஊருக்கு திரும்பி வந்த அவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிடிக்க முயற்சி செய்தபோது குளத்திற்குள் சென்றுள்ளார்.  அங்கு சென்று அவரை பிடித்து வந்து ஊரில் உள்ள கடைவீதியில் வைத்து கிராமத்தினர் கம்பால்  நையப்புடைத்துள்ளனர்.  

தாக்குதலில் காயமடைந்த அரவிந்தன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருவதையடுத்து சம்பவத்திற்கு காரணமானவர்களை சாக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com