"ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை" பிரதமர் அறிவிப்பு!

"ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை" பிரதமர் அறிவிப்பு!

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, ரொனால்டு ரீகன் மையத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், மத்தியில் உரையாற்றினார். அப்போது உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும், இந்திய அரசின் உதவியுடன் ஹீஸ்டன் பல்கலைக்கழகத்தில்  தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய துணை தூதரகங்கள் திறக்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, H1B  விசாவை அமெரிக்காவிலே புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 

மேலும், இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையே தொழில்சார் மற்றும் திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு  உரிய பங்களிப்பை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து 3 நாள் பயணத்தை முடித்து  கொண்டு பிரதமர் மோடி  எகிப்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, வாஷிங்டன் விமான நிலையத்தில் பீரங்கி குண்டுகள் முழங்க மோடி  வழியனுப்பி  வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com