கோடை விடுமுறை முடிந்தது: விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்...! கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்வு...!

கோடை விடுமுறை முடிந்தது: விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்...!  கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்வு...!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் பலர், விமானங்களில் சென்னை திரும்புகின்றனர்   விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.

கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றிருந்தனர். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7ந் தேதி பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து வெளியூர் சென்றிருந்தவர்கள் குடும்பத்துடன் மீண்டும் சென்னை நகருக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். 

இதனால் அரசு போக்குவரத்து கழகம் கூடுதலாக ஏராளமான பேருந்துகளை தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்கு இயக்கத் தொடங்கி இருக்கிறது. அதைப்போல் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகள் அனைத்தும் காலியாகி வெயிட்டிங் லிஸ்ட் 300 வரை தாண்டிவிட்டது. உடனடி முன் பதிவான தக்கலிலும் ரயில் டிக்கெட்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து பயணிகள் விமானங்களை நோக்கி படை எடுக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் பெருமளவு அதிகரித்து உள்ளது. விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

டிக்கெட் விலையின் விபரங்கள் பின்வருமாறு:- 

மதுரை- சென்னை:                           சாதாரண நாட்களில் கட்டணம் -  ரூ.3,629. 
                                                                ஆனால் தற்போது,  ஞாயிறு முதல் செவ்வாய் வரை ரூ. 8,478 முதல் ரூ.12,163 வரை. 

தூத்துக்குடி சென்னை :                  சாதாரண நாட்களில் கட்டணம் - ரூ.4,401
                                                                ஆனால் தற்போது,  ஞாயிறு முதல் செவ்வாய் வரை ரூ. 8,062 முதல் ரூ.14,116 வரை.

திருச்சி - சென்னை:                          சாதாரண நாட்களில் கட்டணம் - ரூ.2,718 
                                                                ஆனால் தற்போது, ஞாயிறு முதல் செவ்வாய் வரை ரூ.6,865 முதல் ரூ.11,195 வரை.

திருவனந்தபுரம்  - சென்னை:       சாதாரண நாட்களில் கட்டணம் - ரூ.3,225
                                                                ஆனால் தற்போது, ஞாயிறு முதல், செவ்வாய் வரை ரூ. 5,814 முதல் ரூ.10,225 வரை 

கொச்சி - சென்னை:                         சாதாரண நாட்களில் கட்டணம்  - ரூ.2,889 
                                                                ஆனால் தற்போது, ஞாயிறு முதல் செவ்வாய் வரை ரூ. 4,012 முதல் ரூ.8,357 வரை 

இவ்வாறு பல மடங்கு, விமான கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டாலும், பயணிகள்  கட்டணங்களை செலுத்தி சொந்த ஊர்களில் இருந்து வருக்கின்றனர் இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் பெருமளவு நிரம்பி வழிகிறது.

இதையும் படிக்க     | கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர் உயர்வு...! மக்கள் அவதி...!