ரயிலில் செயினை பறித்துக் கொண்டு ஓடிய திருடன்...!!

ரயிலில் செயினை பறித்துக் கொண்டு ஓடிய திருடன்...!!
Published on
Updated on
1 min read

விரைவு ரயிலில் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் கழிவறையில் ஒளிந்து கொண்ட வட மாநில கொள்ளையனை துரிதமாக செயல்பட்டுகழிவறையில் சிக்க வைத்து பிடித்துள்ளார் ஊர்க்காவல் படை வீரர்.

சீரடியில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து கொண்டிருந்த சாய் நகர் விரைவு ரயிலில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் பயணிகள் தூக்கத்திலிருந்த  போது  மதுரையைச் சேர்ந்த ரயில் பயணியின் கழுத்தில் இருந்த செயினை வடமாநில இளஞன் பறித்து தப்பித்து சென்றுள்ளான்.

உடனடியாக ரயில் பயணிகள் கூச்சலிடவே சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஊர் காவல் படை வீரர் தேவராஜ் என்பவர்  திருடனை விரட்டிச் சென்ற பொழுது ரயிலின் கழிவறையில் உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டு மறைந்துள்ளான்.

அப்போது ஊர் காவல் படை வீரர் உடனடியாக  திருடன் வெளியில் வராத அளவிற்கு கதவை  கயிற்றினால் கட்டி பின்பு விரைவு ரயில் கர்நாடகா மாநிலம் இலங்கா என்ற ஸ்டேஷனில் நின்ற பொழுது அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்து அவரை ரயில் பெட்டிக்கு அழைத்து வந்து கழிவறையில் பதுங்கி இருந்த வட மாநில இளைஞரை பிடித்துக் கொடுத்துள்ளார்.

விரைவு ரயிலில் அதிகாலை நேரத்தை பயன்படுத்தி  தூக்கத்தில் இருக்கும் ரயில் பயணிகளிடம் அடிக்கடி செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.  இந்த  நிலையில் பல நாள் திருடனை  துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த  ஊர்க்காவல் படை வீரர் தேவராஜை ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com