நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை...ஓபிஎஸ்!!!

நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை...ஓபிஎஸ்!!!
Published on
Updated on
1 min read

தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சராக்கும் கடமை தனக்கு உள்ளது என முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளார்.

தண்டனை வேண்டும்:

திருச்சி ஜி கார்னரில் ஓ.பன்னீா் செல்வம் தரப்பில் முப்பெரும் விழா கூட்டம் நடந்தது.  இதில் ஓ.பன்னீா் செல்வம் பங்கேற்று விழா மேடையில் பேசுகையில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சகோதர பாசத்துடன் அதிமுகவை வளர்த்தனர் எனவும் தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சராக்கும் கடமை எனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார். மேலும் அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளதாகவும் கூறிய அவர் கழகத்தின் நிதியை தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறினார்.  அதிமுக வை வெற்றி பெற செய்ய எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனக் கூறினார்.

தூரத்தில் இல்லை:

தொடா்ந்து பேசிய அவா், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம் எனவும் அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான் எனவும் தொிவித்த அவா், நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
பங்கேற்றோர்:

முன்னதாக கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, ஓபிஎஸ் நீக்கம் உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழாவில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்பட ஆயிரக்கணக்கான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.  அதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீா் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com