பிரிட்ஜை திறந்த பொழுது பரிதாபம் : மூதாட்டி தீக்காயம் - மகன்களுக்கு மூச்சுதிணறல் ....

பிரிட்ஜை திறந்த பொழுது பரிதாபம் : மூதாட்டி தீக்காயம்  - மகன்களுக்கு மூச்சுதிணறல் ....
Published on
Updated on
1 min read

காபி போட பிரிட்ஜ் திறந்த பொழுது பரிதாபம். மின்சாரம் பாய்ந்து பிரிட்ஜ் வெடித்ததில் மூதாட்டிக்கு பயங்கர தீக்காயம். இரண்டு மகன்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சென்னை அம்பத்தூர் கருக்கு பாரத் நகரில் வசித்து வருபவர் கண்ணகி வ/ 50 என்பவர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் கண்ணகி வ/50  என்பவருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் முதல் உதவி சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

பிரிட்ஜ் வெடித்து வீடு முழுவதும் தீ பற்றிய நிலையில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். கண்ணகி தன் இரண்டு மகன்கள் உடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும். அவரது கணவர் காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி செய்து ஓய்வு பெற்று இறந்துவிட்டதாகவும்.

இன்று சம்பவ நேரத்தில் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியை திறந்த பொழுது குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு உடம்பில் தீக்காயம் ஏற்பட்டதாகவும் காரணமாக வீட்டில் புகை மண்டலம் சூழ்ந்தால் அவரது இரண்டு மகன்களுக்கும் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் வந்த அம்பத்தூர் தீனைப்பு மீட்பு துறையினர் விசாரணையில்  உயர் மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.நடந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com