ஆர்வமாக பேசிய ஆளுநர்..! ஹாயாக  தூங்கிய மாணவா்கள்..!  வைரலாகும் ’சங்கீத சுவரங்கள்’..!

ஆர்வமாக பேசிய ஆளுநர்..! ஹாயாக தூங்கிய மாணவா்கள்..! வைரலாகும் ’சங்கீத சுவரங்கள்’..!

Published on

திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் ஆளுநா் உரையின் போது மாணவா்கள் தூங்கி விழும் காட்சி வெளியாகியுள்ளது. 

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு  - தக்ஷா 2.0 (LEADERSHIP CONCLAVE -DAKSHA 2.0) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது சுமார் ஒரு மணி நேரமாக ஆளுநர் உரையாற்றிய போது கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ மாணவிகள் சிலர் அயர்ந்து தூங்கி வழிய ஆரம்பித்தனர். 

இதற்கிடையில், தனது தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத மாணவி ஒருவர் அருகில் இருந்த நாற்காலியில் சாய்ந்தபடியே அயர்ந்து தூங்கினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com