பாடி - கொரட்டூர் : 22 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் நின்றது ஏன்..?

பாடி - கொரட்டூர் : 22 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் நின்றது ஏன்..?

நெடுஞ்சாலைத்துறைத் தொடங்கியது

பாடி - கொரட்டூர் சந்திப்பு - திருநின்றவூர் இடையேயான 22 கிலோ மீட்டர் தொலைவு சாலையை ஆறு வழித்தடமாக மாற்றும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறைத் தொடங்கியது ஆனால் அதனை வெறும் நான்குவழிச் சாலையாக மட்டுமே விரிவாக்கம் செய்ய முடிந்தது. 

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மேலும் பாடி, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த பல வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசுக்கு மாற்றுவதில் சில சிக்கல்கள் என பல்வேறு பிரச்னைகளால் இந்த திட்டம் 2010 - 11ஆம் ஆண்டில் கைவிடப்பட்டிருந்தது ஆனால் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும்  ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது

மேலும் படிக்க | ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையா ? கட்சியினர் சாலை மறியல்

இந்த நிலையில் மீண்டும் 2013ஆம் ஆண்டு பணிகள் தொடங்குவதற்கு முயற்சி செய்தனர் அப்பொழுது எழுந்த பிரச்சனையால் மீண்டும் முடங்கித்தான் போனது இதன் காரணமாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பாடி மேம்பாலம் வரை நான்கு வழிச்சாலையாக இருக்கும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலானது, அம்பத்தூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இரண்டு வழிச் சாலைகளில் மிக மோசமடைகிறது என்றும் நாள் அடைவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் நேரத்திற்கு பணிகளை மேற்கொள்வதற்கு செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டு வருகிறார்கள் வாகன ஓட்டிகள் இந்த நிலையில்தான் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து 152 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் விரைவில் திட்டமிட்டப்படி சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கும் என்று  மாநில தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது 

ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் சவாலாக இருக்கும் ஏனென்றால் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் மேம்பாலத்தை ஆறுவழித் தடமாக மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதியில் 6 வழித்தடம் கொண்ட மேம்பாலத்தை அமைக்க அங்கிருக்கும் நிலங்களைக் கையகப்படுத்த மட்டும் ரூ. 13 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ரயில்வே அனுமதி கேட்டு பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது இந்த நிலையில் விரைவில் சென்னை பாடியிலிருந்து திருநின்றவூர் வரை போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும் புதிய சாலை அமைக்கப்பட இருப்பதும் பொது மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

மேலும் படிக்க | வெப்பச்சலனம் மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை மகிழ்ச்சியில் மக்கள்

வியாபாரிகளும் வணிகர்களும் கடும் எதிர்ப்பு

இந்த நிலையில்தான் வியாபாரிகளும் வணிகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் ஏனென்றால் சென்னை பாடியிலிருந்து திருநின்றவூர் வரை சாலையோரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளும் வணிக கடைகளும் செயல்பட்டு வருகிறது தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை சார்பாக விரிவாக்கம் பணி நடைபெற சூழ்நிலையில் அந்த இடங்களுக்கு முறையான மதிப்பீடுகள் கிடைக்குமா அல்லது இந்த சாலை பணி தொடங்கி விரிவாக முடிக்கப்படுமா என்ற கேள்வியும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது 

பல எதிர்ப்பை தாண்டி இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாக மாற்றக்கூடும் என்பதே மாநில அரசு கோரிக்கையும் ஒன்றிய அரசு எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.