இந்துக்கள் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறார்....? முதலமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை கேள்வி.

புதுச்சேரிக்கு வந்து அமைதியை குலைப்பதற்கு நாங்கள் ஒத்துகொள்ளமாட்டோம்....
இந்துக்கள் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறார்....? முதலமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை கேள்வி.

கோவை விமான நிலையத்தில்  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபொது;--  எப்போதும் கோவைக்கு வருவது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்றும், தஹமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதுவை முதல்வர்  ரங்கசாமி ஆகியோர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் வாழ்த்து கூறுவதாகவும்  தெரிவித்தார். 

மேலும், நேற்றிலிருந்து இரண்டு ஆண்டு சாதனைகள் என விளம்பரங்களும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது எனவும், சாதி,மதம் பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து  கொள்ள முடியாது என  ஸ்டாலின்  கூறியதைச் சுட்டிக்காட்டி,.. தான் ஒரு இந்துவாக, தமிழகத்தில் பிறந்தவராக, தனிநபராக முதல்வருக்கு ஒரு கேள்வியை கேட்பதாக கூறி ஒரு கேள்வியை முன்வைத்தார்.\

அதாவது, " எப்படி பிரித்து பார்ப்பதால்,  இந்துக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்..?  எனவும்,  எதை வைத்து பிரித்து பார்ப்பதால் நீங்கள்  தீபாவளிக்கோ, விநாயகர் சதுர்த்திக்கோ வாழ்த்து சொல்ல மறுக்குறீர்கள் ",  எனவும் கேள்வி எழுப்பியதோடு இதற்கு முதல்வர் ஒரு பதில் சொன்னால் நன்றாக இருக்கும் எனவும்  தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்து செய்தித்தாள்களை பார்க்கும்போது நிறைய விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள் எனவும்,  ஒவ்வொரு அமைச்சர்களும் அவரவர்களின் முக்கியத்துவதற்காக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் எனவும் எல்லா அமைச்சர்களின் துறைகளிலும் நிதி இருக்கிறோதோ இல்லையோ, அனைத்து விளம்பரங்களிலும்  உதயநிதி இருக்கிறார் எனவும் ஆக இரண்டு ஆண்டு சாதனையில் வாரிசு உருவானது இன்னொரு சாதனை எனவும் விமர்சித்தார். மேலும், அறிவிப்புகள் திரும்ப திரும்ப ஒரு ஆட்சியில் வரலாம், ஆனால் அறிவிப்புகளை திரும்ப பெறும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது எனவும் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய தமிழிசை, " பிரித்து பார்க்கவில்லையென்றாலும் வேங்கைவயல் பிரச்சனை இன்று பூதகரமாக வெடித்து கொண்டிருக்கிறது, அண்ணன் திருமாவளவன்,ரவிக்குமார் போன்றவர்களுக்கு ஒரு கோரிக்கை, பாண்டிச்சேரியில் அமைதியை குழைக்க போராட்டம் நடத்துகிறீர்கள்; விழுப்புரம் தொகுதியில்  மருத்துவமனைக்கு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்", எனவும்  எல்லோரும் அவர்கள் வேலையை விட்டு வேற வேலையை செய்கிறார்கள் எனவும், புதுச்சேரிக்கு வந்து அமைதியை குலைப்பதற்கு நாங்கள் ஒத்துகொள்ளமாட்டோம் எனவும்  தெரிவித்தார்.

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தான் பார்க்க நினைப்பதாக கூறிய தமிழிசை சவுந்தர்ராஜன் ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரானாதாக இந்த படம் சித்தரிக்கப்படுகிறது எனவும் ஆகையால் யார் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவாக இருப்பதாக நினைக்கிறார்களோ அவர்கள் இந்த படத்தை தங்களுக்கு எதிரானது என நினைப்பார்கள் எனவும் தீவிரவாத்ததிற்கு எதிரான படம் நினைத்தால் அது தங்களுக்கு ஆதரவான படம் என நினைப்பார்கள் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும், பிரதமர் கூறியது போல "தீவிரவாதம் எந்த நிலையில் வந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று", எனவும் அதேபோன்று பெண்களையும் இளைஞர்களையும் பாதிக்கும் வகையில் இருந்தால் அதன் உண்மை தன்மை தெரிந்திருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக சட்டமன்றத்திலேயே பேசப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். 

மேலும் இவர்களுக்கு தெரிந்த கருத்தை வைத்து படம் எடுத்தால் அது கருத்து சுதந்திரம் எனவும் ஆனால் சொல்ல வேண்டிய கருத்தை வைத்து எடுத்தால் அது கருத்து சுந்திரம் கிடையாது; தடை செய்ய வேண்டும்,  எனவும் உண்மைத்தன்மை எங்கிருந்தாலும் அதை பார்க்க வேண்டும் என்பது தனது கருத்து என அவர் தெரிவித்தார்..

மேலும் கர்நாடக தேர்தல் பற்றிய கேள்விக்கு தான் தேர்தல் அரசியலில் இல்லை,  அதனால் கருத்து கூற இயலாது எனவும் ஆனாலும் அதை சொல்லும் கருத்து சுதந்திரம் தனக்கு இருக்கிறது எனவும் அப்போது தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com