air india plane crash 
கவர் ஸ்டோரி

AIR INDIA PLANE CRASH-விடுதியின் மேல் வெடித்து விழுந்த விமானம்..! 5 மருத்துவ மாணவர்கள் பலி!

வெடித்து விழுந்த விமானம் விமான ஓடுதளத்திற்கு அருகே இருந்த மருத்துவர் விடுதி மேல்....

Saleth stephi graph

மருத்துவர் விடுதியில் 60 -பேர் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்திலிருந்து லண்டன் சென்ற Boeing 787-8 ‘Take Off” ஆன சில நிமிடங்களில் வெடித்து சிதறியுள்ளது. சிதறிய இடத்திலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து பகல் 1.17 -க்கு புறப்பட்டுள்ளது.

1.39 க்கு அனுபவம் பெற்ற மூத்த விமானி சுமித் சபர்வால்  ‘May Day Call” செய்துள்ளர். கட்டுப்பட்டு அறையை  தொடர்புகொண்ட 3 நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீண்டும் விமானிகளை  கட்டுப்பாட்டு முறையால் தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

242 க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தில் இருந்ததாகக் தெரிகிறது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும்  இந்த விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகின்றன.

மேலும் 242 பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் 1169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டிஸ்காரர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், 1 கனடா நாட்டை சேர்ந்தவர் உள்பட விமான ஊழியர்கள் சிலரும் இந்த விபத்தில் இருந்துள்ளனர்.

  மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து சக்கரங்கள் உள்வாங்கும் முன்னரே விமானம் வெடித்து சிதறியது.

வெடித்து விழுந்த விமானம் விமான ஓடுதளத்திற்கு அருகே இருந்த மருத்துவர் விடுதி மேல் விழுந்துள்ளது. BJ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விடுதியின் மேற்கூரை மேல் விழுந்துள்ளது. இதில் கேன்டீன் பகுதிபெருமளவில் சேதமடைந்துள்ளது. இதில் 5 பயிற்சி மருத்துவ மாணவர்கள் பலியாகி உள்ளனர். ஏற்கனவே இந்த கோர விபத்தில் பயணிகள் அனைவரும் பலியாகி வாய்ப்புள்ள நிலையில், மருத்துவ மாணவர்களும் கொத்து கொத்தாக இருந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.