வில்லிசையில் கருவாகி ராட்டின இசையில் உருவானவர், தகைசால் தமிழர் என்ற பெருமையை பெற்றவர் மறைந்த "குமரி அனந்தன்" ஐயா அவர்கள், இவர் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குமரி மாவட்டம்,அகத்தீஸ்வரம் என்ற பகுதியில் 1933 ல் பிறந்தவர், இவரது தந்தை ஹரிகிருஷ்ணன் அவர்கள் ஒரு சிறந்த வில்லுப்பாட்டு கலைஞராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் இருந்தவர், எனவே சிறு வயதிலிருந்து தேசத்தின் மீதும், தமிழின் மீதும் பற்றுடன் வளர்ந்தவர் குமரி அனந்தன் அவர்கள்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மதுரையில் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பண்ணியாற்றி வந்தார், பகல் முழுவதும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டாலும், மாலையில் மதுரைக்கு அருகில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை குறித்தும், காந்தியத்தை குறித்தும் பிரசாரத்தில் ஈடுபடுவாராம், அப்போது ஒரு கூட்டத்தில் இவரை சந்தித்த காமராஜர், இவரை சென்னைக்கு அழைத்து கட்சியில் பொறுப்புகளை அளித்துள்ளார்.
பின்னர் காங்கிரஸ் கட்சிக்காக அயராது உழைத்த இவர், பாராளுமன்றத்தில் முதல் முதலில் தமிழில் கேள்வி கேட்டவர் என்ற சிறப்பையும் பெற்றார்,இவர் பாராளுமன்றத்தில் கேள்விகளை தமிழில் கேட்கும் போது, அங்குள்ள அனைவரும் "பேகு பெய்ட்டோ" என்பார்களாம் அப்போதும் இவர் வெளியேற மாட்டாராம் காரணம், நான் வெளியேறிவிட்டால் அவர்கள் சொன்னது போல முட்டாளாகிவிடுவேன் என்பாராம், அதனால் இவரை காவலாளிகள் குண்டுக்கட்டாக வெளியே தூக்கிவருவார்களாம்.
பின்னர் இது போன்ற நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மொழி குழு அமைத்து இவரின் கோரிக்கை கேட்கப்பட்டு, பாராளுமன்றத்திலே (1978நவம்பர் 20) ஆம் தேதி தமிழில் வினா தொடுத்து விடை பெற்றுள்ளார்.
எனவே இவரை கலைஞர் "தனியொருவராக தமிழிலுக்கு பெருமை சேர்த்தவர்" என பாராட்டுவார்.
இந்தியாவிலே அதிக பாதை யாத்திரை செய்தவர், என்ற பெருமையும் இவரையே சேரும், பல முறை நடை பாதை மேற்கொண்ட, போது உடல் நலம் குறைவால் மருத்துமனையில் அனுமதித்த போதும், நடைபாதையை கைவிடாமல் மேற்கொண்டவர் இவர் என கூறுகிறார் "வைகோ" அவர்கள்.
அரசியல் என்றாலே பகையும் உடன் சேர்த்து, இருக்க தான் செய்யும் ஆனால் இவருக்கு அப்படி இல்ல எல்லா அரசியல் தலைவர்களும், கட்சிக்காரர்களும் இவரை எப்போதும் மரியாதையுடன் பார்ப்பார்கள், காரணம் அனந்தன் அவர்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுபவர், நல்லதை யார் செய்தலும் ஏற்று கொள்பவர். ஒரு அரசியல்வாதி தேர்தலில் போட்டி இடுவதற்கு, முன்பு தனது சொத்து மதிப்புகளை வெளிபடுத்துவது போல தேர்தலில் வெற்றிப்பெற்று பதவிக்காலம் முடிந்த பிறகும், அவரிடம் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது. என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தவர்.
அதே போல இவரது ஆட்சிக்காலம் முடிந்த ஒவ்வொரு முறையும், அவரிடம் இருந்த சொத்து மதிப்புகளை வெளியிட்டவர், இப்படி செய்தால் மட்டுமே அரசியல் வாதிகள் மக்களுக்காக மட்டுமே பணியாற்ற நினைப்பார்கள், இல்லையெனில் அரசில் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிடும் என்பதில் உறுதியாக இருந்தவர்.
இதுமட்டும் அல்லாமல் தமிழின் மீது இருந்த பற்று காரணமாக, செம்பணை நாடு, பாரதியார் பாடிய பாரதி, கலித்தொகை இன்பம், நல்லாட்சி தந்த காமராஜர் போன்ற பல்வேறு நூல்களை எழுதி உள்ளார், மேடைப்பேச்சில் இவரை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது, அவ்வளவு சிறப்பாக பேசும் தன்மையாய் கொண்டவர்.
தமிழ் இலக்கிய உலகில் "இலக்கியச் செல்வர்" என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர். மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் தமிழக அரசு இவருக்கு தகைசால் தமிழர் விருது, கொடுத்ததும் சிறப்பித்துள்ளது.
"அன்பிற் சிறந்தீர்" என்றுதான் எப்போதும் பேச தொடங்குவாராம், காமராஜரின் தொண்டன் என்பதே, தனக்கான சிறப்பு என்று நினைத்தவர், காமராஜரின் வழியிலே பயணித்த பெருமைக்கு உரியவர், குமரி அனந்தன் அவர்கள், தேசியத்தையும் தேசபக்தியையும் தனது இரண்டு கண்கள் என்றவர்.
இவருடைய மகள் தமிழிசை, வேறொரு கட்சியில் சிறந்த பதவியில் இருந்த போதும், மகளுடன் செல்லாமல் எப்போதும் காங்கிரஸ் மற்றும் காமராஜரின் தொண்டனாகவே இருந்த இவர், அவருடைய இறுதி மூச்சி இருக்கும் வரை தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், காமராஜர் மற்றும் காந்தியின் கொள்கைப்படி போராடியவர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்