"உடம்போட நீர்ச்சத்து இவ்ளோ முக்கியமா" - டிஹைட்ரெட் நடக்காம பாதுகாக்குறது எப்படி.. இதை பண்ணாலே போதும்

ஆனா, சம்மர்ல இதை மெயின்டெய்ன் பண்றது சவாலா இருக்கு. ஏன்னா? வெயில்ல வியர்வையா தண்ணி உடம்பை விட்டு வெளிய போயிடுது, அப்புறம் சோடா, ஜூஸ்னு தப்பு தப்பா குடிச்சு உடம்ப கெடுத்துக்கறோம்.
summer
summerAdmin
Published on
Updated on
2 min read

சம்மர் டைம் வந்தாலே வெயில் தாங்க முடியல, வியர்வை வெளியேறி , உடம்பு சோர்ந்து போயிடுது. இதுல உடம்புல தண்ணி லெவல் கம்மியாகிடுச்சுன்னா, டயர்ட்னெஸ், தலைவலி, சோம்பேறித்தனம்னு எல்லாம் வந்து உடம்பை அட்டாக் பண்ணும். உடம்பு சரியா வேலை செய்யணும்னா, 60-70% தண்ணியால ஆன நம்ம பாடிய நல்லா ஹைட்ரேட் பண்ணி வெச்சிருக்கணும். ஆனா, சம்மர்ல இதை மெயின்டெய்ன் பண்றது சவாலா இருக்கு. ஏன்னா? வெயில்ல வியர்வையா தண்ணி உடம்பை விட்டு வெளிய போயிடுது, அப்புறம் சோடா, ஜூஸ்னு தப்பு தப்பா குடிச்சு உடம்ப கெடுத்துக்கறோம். அதனால, இதை எப்படி சரியா பண்றதுனு ஒரு சில தகவலை தெரிஞ்சிக்கலாம்.

உடம்புக்கு தண்ணி ஏன் முக்கியம்?

தண்ணி இல்லாம நம்ம உடம்புல எதுவுமே நடக்காது, நம்ம உடம்புல தண்ணி இருக்கறதாலதான் ரத்தம் ஓடுது, செல்கள் வேலை செய்யுது, உடம்போட டெம்பரேச்சர் கன்ட்ரோல்ல இருக்கு. சம்மர்ல வெயில் அடிக்கறப்போ வியர்வை மூலமா தண்ணி வெளிய போயிடுது. இதை ரீப்ளேஸ் பண்ணலேன்னா, நம்ம உடம்பு டீஹைட்ரேஷன் ஆயிடும்னு, மருத்துவர்கள் சொல்றாங்க - ஒரு நாளைக்கு ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணியும், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணி குடிக்கணும்னு. இந்த அளவுகள் அவர்களோடு உடம்பை பொறுத்தாதுனு சொல்றாங்க, ஆனா சம்மர்ல இது இன்னும் கொஞ்சம் அதிகமாவே தேவைப்படுமாம், ஏன்னா வியர்வை லாஸ் அதிகம்.

சம்மர்ல தண்ணி லெவலை மெயின்டெய்ன் பண்றது எப்படி?

இப்போ மெயின் டாபிக்குக்கு வருவோம். சம்மர்ல தண்ணி லெவலை பேலன்ஸ் பண்றதுக்கு சில டிப்ஸ் இருக்கு. இது வெறும் "தண்ணி குடி"னு சொல்லி முடிச்சிடற விஷயம் இல்லை. நம்ம ஊர் ஸ்டைல்ல, லைஃப் ஸ்டைல்லுக்கு ஏத்த மாதிரி பண்ணணும்.

காலையில எந்திரிச்சதும் ஒரு டம்ளர் தண்ணி குடிங்க . இது உடம்புல மெட்டபாலிசத்தை கிக்-ஸ்டார்ட் பண்ணும். சம்மர்ல இது ரெண்டு டம்ளரா குடிச்சாலும் நல்லதுதான்.ஒரே டைம்ல ஒரு லிட்டர் தண்ணி குடிக்காதீங்க. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு சின்ன டம்ளர் மாதிரி சிப்பு சிப்பா குடிங்க. உடம்பு நல்லா ஆப்சார்ப் பண்ணும்.

தண்ணி குடிக்கறது மட்டும் இல்லாம, நம்ம ஊர் சாப்பாடுலயும் தண்ணி லெவலை ஜாஸ்தி பண்ணலாம். தர்பூசணி பழம் சாப்பிடுறதனால உடம்புக்கு நல்ல நீர் சத்து கிடைக்கும், ஏன 90% தண்ணியால ஆனது தர்பூசணி,இதுனால உடம்பு குளிர்ச்சியா இருக்கும், தாகமும் தீரும்.சாலட்ல வெள்ளரி போட்டு சாப்பிடுங்க. இதுல தண்ணி அதிகம், விட்டமின் சி, கே எல்லாம் இருக்கு. நம்ம ஊர் ஸ்பெஷல் மோர், ஒரு கிளாஸ் குடிச்சு பாருங்க. தாகம் தீரும், உடம்பு கூலிங் ஆகும், மோர்ல இருக்குற புரோபயாடிக்ஸ் செரிமானத்துக்கு உதவும்.

தப்பு பண்ணாதீங்க!

வெயில் காலத்துல காப்பி டீ கம்மி பண்ணிக்கோங்க இது ரெண்டும் டீஹைட்ரேட் பண்ணும். சம்மர்ல இதை குடிக்கறத முடிஞ்சா அளவுக்கு தவிர்த்துக்கோங்க. பதப்படுத்தப்பட்ட குளிர் பானக்களை குடிக்காதீங்க, இதுல சர்க்கரை ஜாஸ்தி இருக்குறதனால, உடம்புக்கு தண்ணி சேர்க்கறதுக்கு பதிலா, நம்ம உடம்பை டயர்டாக்கிடும். முக்கியமா வெயில்ல ஓவரா உலாத்தாதீங்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, வெயில்ல அலையாதீங்க. வியர்வை ஜாஸ்தியா போயி டீஹைட்ரேஷன் ஆயிடும்.

உடம்பு சிக்னல் தெரிஞ்சிக்கோங்க

நம்ம உடம்பு தண்ணி வேணும்னு,எப்படினு பாத்த சிறுநீர் மஞ்சளா இருந்தா, தாகம் ஜாஸ்தியா இருந்தா, உதடு வறண்டு போனா - இதெல்லாம் டீஹைட்ரேஷன் சிக்னல். உடனே தண்ணி குடிங்க. தலைவலி, சோர்வு வந்தாலும் தண்ணி தேவைனு அர்த்தம்.

ஒரு ரிசர்ச் படி, சம்மர்ல உடம்போட எலக்ட்ரோலைட்ஸ் (சோடியம், பொட்டாசியம்) பேலன்ஸ் ரொம்ப முக்கியம். இளநீர், மோர் இதுக்கு செமயா உதவி பண்ணும். ஒரு ஸ்டடி சொல்லுது - 2% தண்ணி லெவல் கம்மி ஆனாலே உடம்பு சோர்ந்து போயிடுமாம். அதனால, தண்ணிய குடிக்கறதுல கவனமா இருங்க.

காலையில எந்திரிச்சு ஒரு இளநீர், ப்ரேக்ஃபாஸ்ட்கு தர்பூசணி ஜூஸ், மதிய சாப்பாட்டு கூட மோர், ஈவ்னிங் டைமுக்கு வெள்ளரி சாலட், நைட் தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு டம்ளர் தண்ணினு, குடிச்சி பாருங்க. உடம்பு சம்மர்லயும் ஃப்ரெஷ்ஷா, கூலா இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com