தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் அதே பகுதியில் தனியார் பேட்டரி கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவியும் 16 வயதில் ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீராம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்ரீராம் தனது தந்தையுடன் பழனிக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டு வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம்போல் தனது அன்றாட வேலைகளை பார்த்து இரவு உறங்க சென்றுள்ளார். திங்கட்கிழமை காலை வெகு நேரம் ஆகியும் ஸ்ரீராம் அறையை விட்டு வெளியே வராததால் அவரை எழுப்ப ஸ்ரீராமின் அறைக்கு தாய் சென்றுள்ளார்.
அப்போது ஸ்ரீராம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீராமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் ஸ்ரீராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது மாணவனின் அறையில் அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர் அந்த கடிதத்தில் மாணவன் “ என் இந்த நிலைமைக்கு எங்க ஸ்கூல் பதினொன்றாம் வகுப்பு கிளாஸ் சார் தான் காரணம் நானும் ஒரு பெண்ணும் ஸ்கூலில் நட்பாக பேசினோம்.
அதை தவறாக புரிந்து கொண்ட எங்க சார் எல்லார் முன்னாடியும் என்னை கெட்ட வார்த்தையால திட்டுனாரு அதுக்கு அப்புறம் என்னையும் அந்த பெண்ணையும் தனியாக அழைத்து மீண்டும் கேட்ட வார்த்தையால திட்டி உன் அப்பன் வந்த கூட புடுங்க முடியாது என கூறினார் என்னோட இந்த முடிவுக்கு முழுக்க அவர் தான் காரணம்” என எழுதியுள்ளார்.
இதனை அறிந்த மாணவனின் பெற்றோர்கள் மாறும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் மாணவன் கட்டத்தில் குறிப்பிட்டிருந்த வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு மாணவனின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர் திட்டியதற்காக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.