காங்கேயம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் தந்தை கைது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்த காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து, 14 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார் இந்த இளம் பெண். இருவருக்கும் விவாகரத்தான பின் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கோஸ் (37) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். திருமணமான தொடங்கத்தில் மேற்கு வணக்கத்திலையே கூழை தொழில் செய்து வந்த ரஞ்சித் கோஸ், பின்னர் தமிழகத்திற்கு வேலைக்காக குடும்பத்துடன் இடம் பெயர்த்துள்ளார்.
இந்த நிலையில், ரஞ்சித் கோஸ் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேவீடு எடுத்து கொடுப்பதுடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து வரும் இவர், சம்பவத்தன்று தனது 2-வது மனைவியின் மகளான 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மேலும் தாயிடம் இது குறித்து கூற கூடாது என்றும் மிரட்டியுள்ளார். முதலில் பயத்தில் இருந்த சிறுமி, அடுத்தடுத்து அதே போல் நடக்கவே தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வடமாநில பெண், இதுபற்றி காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து காங்கேயம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து, ரஞ்சித் கோஸிடம் விசாரித்த போது குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார். அதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து, அவர்களை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வடமாநில நபர் ரஞ்சித் கோஸ்க்கு, குற்றத்தின் தீவிரம் கருதி 3 ஆண்டுகள் முதல் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.