க்ரைம்

“லவ் பண்ணலனா.. ஆசிட் அடிப்பேன்” - 17 வயது சிறுமியை துரத்தி மிரட்டல்! தவெக நிர்வாகி ஜோசப் - க்கு வலைவீச்சு

கடைகளுக்கு சென்று வரும்போதெல்லாம் ஜோசப் துரத்தி வந்து பேசுவதாகவும்

Muthu Lakshmi

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ். கொடிக்குளம் பேரூராட்சியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு ஒரு தலைபட்சமாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் சிறுமி அருகே உள்ள கடைகளுக்கு சென்று வரும்போதெல்லாம் ஜோசப் துரத்தி வந்து பேசுவதாகவும், தன்னை காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்த தொடர் மிரட்டல் மற்றும் பின் தொடர்ந்து வருவது குறித்து, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் சிறுமி.  இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஜோசப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக பெற்றோர் கூமாபட்டி காவல்துறையினரை அணுகியபோது புகார் எடுக்க தாமதப்படுத்தியதாகவும் பின்னர் மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டு அலைக்கழித்ததாகவும் தெரிவித்துள்னர். வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த தவெக நிர்வாகி ஜோசப் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. 

மேலும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்த செய்தியை காவல்துறையினர் மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழக ஆட்சியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வரும் நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாலியல் குற்றங்களில் சிக்கி வருவதும் சர்சையை ஏற்படுத்தி வருகிறது. சிறுமியை தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பொதுமக்களிடம் தெரிந்தால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வரும் என்பதால் காவல்துறையினர் போக்சோ வழக்குகளை மறைக்கும் செயலில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.