ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்ற போது அந்த வீட்டில் இருந்த 12 வகுப்பு படிக்கும் தன்மயி என்ற சிறுமியுடன் நரேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் தன்மையி உடன் நட்பாக பழகிய நரேஷ் பின்னர் “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நான் சிங்கிள் தான் நம்ம லவ் பண்ணலாமா” என கேட்டுள்ளார். நரேஷ் சொல்வதெல்லாம் உண்மை என நினைத்த சிறுமி நரேஷை காதலிக்க தொடங்கியுள்ளார். இருவரும் மூன்று மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நரேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை தன்மயிற்கு தெரியவந்துள்ளது.
இருப்பினும் நரேஷை தொடர்ந்து காதலித்த தன்மயி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். அப்படி இல்லை என்றால் என்னிடம் பழகியதை போலீசில் புகாரளித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தன்மயியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த (ஜூன் 07) காலை தன்மயியை வெளியில் அழைத்து சென்ற நரேஷ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தன்மயியை அடித்து கீழே தள்ளி அருகிலிருந்த கல்லை தலையில் போட்டுள்ளார். அப்போது உயிர் போகாததால் பீர் பாட்டிலை வாயில் நுழைத்து கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
இரவு நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் தன்மயியை ஊர் முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். அதன்படி தன்மயியை தேடிவந்த போலீசாருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அடையாளம் தெரியாத சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தன்மயியின் பெற்றோருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.பின்னர் சடலத்தின் கையிலிருந்த டாட்டூவை வைத்து உயிரிழந்துள்ளது தன்மயி என்பதை உறுதி செய்த போலீசார். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் போனை பரிசோதித்த போலீசார் சிறுமி நரேஷை காதலித்து வந்ததை கண்டறிந்துள்ளனர்.
எனவே நரேஷின் மீது சந்தேகம் அடைந்து நரேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன்மயியை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட நரேஷ் கொலை செய்ததற்கான காரணத்தையும் போலீசில் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி காதலித்து கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.