2 sons killed a farmer in up 
க்ரைம்

“தாயோடு ஓடிப்போன விவசாயி..” 20 வருடம் காத்திருந்து பழிதீர்த்த மகன்கள்… இன்ஸ்டாகிராம் பதிவால் சிக்கியது எப்படி?

20 வருடங்களுக்கு முன்னர் விக்கி குமார், நிக்கில் குமார் ஆகியோரின் தாயுடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது....

Saleth stephi graph

உத்தரபிரதேசம்; ஆக்ரா பகுதியில் உள்ள தண்டா கிராமப்பகுதியில் விவசாயியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள் தலைமறைவு.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரவீந்திர சிங். 55 வயதாகும் திருமணம் ஏதும் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் 20 வருடங்களுக்கு முன்னர் விக்கி குமார், நிக்கில் குமார் ஆகியோரின் தாயுடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. 

மேலும் ரவீந்திர சிங் விக்கி, நிக்கில் ஆகியோரின் தாயாரோடு வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் ஏதோ காரணங்களால் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். ஆனால் தற்போது வரை இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்கி, நிக்கில் ஆகிய இருவரும் 20 வருடங்களாக தனக்கும் தன் குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்த ரவீந்திர சிங்கை பழிவாங்கும் நோக்கோடு இருந்துள்ளனர். இதனை விளைவாக “சில தினங்களுக்கு முன்பு விக்கியும், நிக்கிலும் சேர்ந்து ரவீந்திர சிங்கை சுட்டுக்கொன்று, தங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை உண்டாக்கிய நபரை பழி வாங்கிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரவீந்திர சிங்கின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ணைப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நிக்கில் மற்றும் விக்கி மீது பி.என்.எஸ் 103 -ன் படி கொலைவழக்கு பதிவாகியுள்ளது. தலைமறைவான் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்