
செங்கல்பட்டு கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் அன்பு இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இன்று காலை இவரது ஓட்டுநர் லாரியை செங்கல்பட்டுக்கு எடுத்து சென்று, அங்கு கட்டுமான பொருட்களை லாரியில் லோடு ஏற்றி எடுத்து சென்னைக்கு ஓட்டி வந்துள்ளார்.
அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடிக்கு வந்த போது வரி செலுத்த பாஸ்டராக்கில் போதிய பணம் இல்லாமல் இருந்துள்ளது. எனவே லாரியை ஓரம் கட்டிய ஓட்டுநர் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது, சுங்க சாவடிக்கு அருகில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் லாரியில் ஏறி லாரியை சென்னையை நோக்கி இயக்கி சென்றுள்ளார்.
இது குறித்து அருகில் இருந்த போலீசிடம் ஓட்டுநர் தகவல் அளித்ததை அடுத்து, அங்கிருந்த போலீஸ் வாக்கி டாக்கி மூலம் னைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சிங்கப்பெருமாள் கோவில் அருகில் இருந்த போலீசார் பேரிகார்டுகள் அமைத்து லொறியை பிடிக்க முடியவில்லை.
எனவே லாரியை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த போலீசாரில், ஒரு காவலர் சாதுர்யமாக லாரியின் பக்கவாட்டில் ஏறியுள்ளார். பின்னர் சுமார் 15 கிலோமீட்டர் லாரியை துரத்தி சென்றுள்ளனர் போலீசார். லொறியில் இருந்த போலீசார் அந்த லொறியை முயற்சி செய்து நிறுத்த பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
குற்றவாளியை பிடிக்க 15 கிலோமீட்டர் லாரியில் பாதுகாப்பின்றி தொங்கி சென்ற காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்