sexual abuse case 
க்ரைம்

இறுதி சடங்கில் பார்த்த சிறுவனுடன் பலமுறை உடலுறவு.. சமூக வலைதளப்பக்கத்தில் பழகி நெருக்கம்! போலீசாரிடம் சிக்கிய 'ஆபாச சாட்'

அய்லா அந்த சிறுவனுடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

அமெரிக்காவில் புளோரிடாவைச் சேர்ந்த 20 வயதுப் பெண் ஒருவர், குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சமயத்தில் ஒரு சிறுவனை சந்தித்துள்ளார். அவனிடம் பாலியல் ரீதியாக பேசி, தயார்படுத்தி, அந்த சிறுவனுடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைகளின்படி, 2025-ம் ஆண்டு நவம்பரில் ஒரு இறுதிச் சடங்கில் அந்த சிறுவனை சந்தித்த பிறகு, அய்லா கோன்சலஸ் சலினாஸ் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவனுடன் சமூக ஊடகங்களில் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியுள்ளார். அறிக்கைகளின் படி, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அய்லா அந்த சிறுவனுடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கடந்த 2026-ம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த உறவைத் தொடங்கியவர் அந்த சிறுவன்தான் என்று தெரியவந்துள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளைத் துப்பறிவாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், கோன்சலஸ் சலினாஸ் மீது, சிறுவன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்