Valeria Marquez social media influencer 
க்ரைம்

“விலை உயர்ந்த பரிசு கொண்டு வந்திருக்கிறேன்” நேரலையின்போது நடந்த துப்பாக்கிசூடு..! பெருகிவரும் Femicide..!

சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் என்றாலே அவ்வப்போது நேரலை செல்வது வழக்கம். அந்த வகையில் வாலேவும் நேரலையில் ரசிகர்கள் உடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்...

Saleth stephi graph

வாலேரியா மார்கெஸ் (Valeria Márquez), 23 வயது, மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள சபோபான் நகரில் உள்ள தனது அழகு நிலையத்தில் டிக்‌டாக் நேரலையின்போது  (livestream) மர்ப நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான வாலேரியாவை டிக்டேக்கிலும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பேர் தொடர்கின்றனர். சலூன் வைத்து நடத்திவரும் இவர், அழகு குறிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

விலை உயர்ந்த பரிசு!

சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் என்றாலே அவ்வப்போது நேரலை செல்வது வழக்கம். அந்த வகையில் வாலேவும் நேரலையில் ரசிகர்கள் உடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது “என்னை சந்தித்து விலை உயர்ந்த பரிசினை வழங்க சிலர் வந்தனர். ஆனால் நான் அவர்கள் வந்தபோது கடையில் இல்லை. ஆனால் நான் அந்த பரிசுக்காக காத்திருக்கவில்லை” என பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் எந்த பரிசை பற்றி பேசிக்கொண்டிருந்தாரோ அதுவே அவருக்கு மரணத்தை கொண்டு வரப்போகிறது ஏண்டி=உ அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நேரலையில் நடந்த கொடூரம்!

தொடர்ந்து  மார்கெஸ் தனது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, "அவர்கள் வருகிறார்கள்" என்று கூறியிருந்தார். அதன் பின்னர், பின்னணி சத்தத்தில், "ஹே, வாலே?" என்று ஒருவர்கூப்பிட்டதும். "ஆம்," என்று மார்கெஸ் பதிலளித்தார், பின்னர் அவர் நேரலை ஒலி (audio) கேட்கவில்லை.

அடுத்த சில நொடிகளில், பின்னாலிருந்து துப்பாக்கியால் சுடும் சத்தமே கேட்டது. ப மார்கெஸ் தனது வயிற்றை பிடித்து, மேசையில் விழுந்து கிடந்தார். ஒரு நபர் அவரது கைபேசியை எடுக்க முயற்சித்தபோது, அந்த நபரின் முகம் நேரலைக்குள் சில நொடிகள் தோன்றியது, பின்னர் வீடியோ முடிந்தது.

இதனை தொடர்ந்து மார்க்கெஸ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

இந்த சம்பவம் ஜாலிஸ்கோ பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வு!

சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரிட்டிஷ்சீரிஸ் Adolescence, பெனக்ளுக்கு எதிராக குறிப்பாக எதிர் பாலின ஈர்ப்பு - வெறுப்பு மற்றும் அதன் உட்சபட்ச செயல்பாடு என அனைத்தயும் மிக தெளிவாகவும், சிறந்த கோணத்திலும் காண்பித்தது.

 Femicide - என சொல்லப்படும் பெண்கொலை அதாவது பாலினத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் கொலைகளை கொலையாளியின் உளவியல் பார்வையோடு விவரித்திருந்தது. 

இன்று  வாலேரியாவிற்கும் அப்படியான ஒன்றுதான் நிகழ்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மெக்சிகோ மாகாணத்தில் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 2024 அக்டோபர் மாதம் முதல் 906 கொலைகள் பதிவாகியுள்ளதாக தரவு ஆலோசனை நிறுவனம் T Research தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம் கூட இதற்கு ஒரு முக்கிய காரணம்தான். இந்த சோசியல் மீடியாவால் தான் இது போன்று சம்பவங்கள் நடக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாலும், மக்களுக்கு பிற பாலினம் , அவர்களின் உணர்வுகள், மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்து நேர்மையான மேலும் சரியான புரிதல் இல்லை என்பதையே இது மீண்டும் மீண்டும் காட்டுகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்