
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் பாலு வயது (30). இவர் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் வேலையை செய்து வருகிறார். இவர் தனது கல்லூரி தோழியான புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
பாலு - புவனா தம்பதியினருக்கு 4 வயதில் சாஸ்மிதா என்ற பெண் குழந்தையும் உண்டு.இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்மிதாவுக்கு வலிப்பு நோய் ஏற்படவே பாலுவின் உறவினரான விஜி (வயது 27) என்பவர் பாலுவின் மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது விஜிக்கும் புவனாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரியாமலே ஒரு வருடம் கடந்துள்ளது .
புவனாவும் பாலுவை கண்டுக்காமல் விஜியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு இந்த காதல் விவகாரம் பாலுவிற்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் சண்டை நாளுக்குநாள் மோசமடைந்து உள்ளது. தொடர்ந்து “உன்னுடன் வாழ விரும்பவில்லை, நான் விஜியைத்தான் காதலிக்கிறேன்” எனக்கூறி புவனா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வாலாஜாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்ய பலமுறை முயற்சித்துள்ளார் பாலு. ஆனால் புவனா வர மறுத்துள்ளார். இப்படியிருக்க சில மாதங்களுக்கு முன்பு புவனாவின் பெயர் வீங்கி இருப்பதை கண்ட பாலு என்ன “வயிறு வீக்கமாய் இருக்கிறது” என கேட்டுள்ளார். அதற்கு புவனா வயிற்றில் கட்டி இருப்பதாக கூறிஇருக்கிறார்.
தொடர்ந்து “நீ என்னுடன் வாழ வர மறுக்கிறாய் என்னுடைய குழந்தையை என்னிடம் கொடுத்து விடு” எனக் கேட்டு தன் பெண் குழந்தையை பாலு தன் வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பெரிதாக பேச்சு வார்த்தை ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் பாலு மீண்டும் தன் மனைவியை சமாதானம் செய்யும் நோக்கோடு வாலாஜாவில் உள்ள தனது மணியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. புவனா 8 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்ட பாலு “என்ன இது? ஆரம்பத்தில் கேட்டால் கட்டி என்றால் தற்பொழுது கர்ப்பமாய் இருக்கிறாய்” என்று கேட்டுள்ளார்.
அப்பொழுது புவனா புவனாவின் தாயார் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் புவனாவின் தாயார், “ஆமாம் என் மகள் கர்ப்பமாக தான் இருக்கிறாள். ஆனால் இது உன் குழந்தை அல்ல. விஜிக்கு உருவானது” என சத்தம் போட்டு பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலு அருகிலிருந்த இரும்பு ராடை எடுத்து மாமியாரையும் மனைவியையும் தாக்க முயற்சித்துள்ளார்.அப்போது புவனா தப்பித்து சென்றுவிடவே, மாமியாரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதே வேகத்தில் புறப்பட்டு தன் சொந்த ஊருக்கு வந்த பாலு விஜியின் வீட்டிற்கு சென்று விஜியை தேடியுள்ளார். ஆனால் அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜியின் தாயார் ராஜேஸ்வரியை முதலில் இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதைக் கண்ட ராஜேஸ்வரியின் கணவர் அண்ணாமலை அங்கிருந்து தப்பித்து மாடியில் இருந்து கீழே இறங்கி ஓட ஆரம்பித்துள்ளார்.
பாலு அண்ணாமலையை பின் தொடர்ந்து சென்று அண்ணாமலையும் வீ இரும்பு ராடால் தாக்கி விட்டு சோளிங்கர் கொண்ட பாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்