3 Tamils killed Karnataka 
க்ரைம்

“தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை?” கர்நாடக வனத்துறைக்கு எதிராக கொந்தளித்த மக்கள்.. கட்டமாக கண்டனம் தெரிவித்த பெ. சண்முகம்

சுட்டுக்கொல்லப்பட்டவராகள் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனதுரை அமைச்சர் தெரிவிதுள்ளார்.

Vinvizhi Leninton

தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்றதாக வெளி வந்த செய்தியையடுத்து கர்நாடக வனத்துறையினரை கைது செய்யக்கோரி ஹனூரில் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் சாமராஜநகர் மாவட்டத்தின் ஹனூர் தாலுக்காவில் உள்ள ஷக்யா அருகே மரியா மங்களா பீட் பகுதியில் வனத்துறையினர் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், என்கவுன்டர் சம்பவத்தால் கோபமடைந்த பொதுமக்கள், ஹனூர் நகரில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவராகள் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசி செய்திருவனத்திடம் கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் ஒரு வனத்துறை அதிகரிக்கும் படுகாயமடைந்ததாகவும் கூறபடுகிறது. நேற்று இரவு தொடங்கப்பட்ட போராட்டம் விடிய விடிய தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஹனூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அந்த பகுதி காவல்துறையின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், ஹனூரில் உலா வனத்துறை அலுவலகத்திற்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அவ்விடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராமல் இருப்பது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே காவிரி தண்ணீர் தருவதில் கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது இந்த விவகாரம் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து, சிபிஎம் மாநில செயலாளர், பெ. சண்முகம் “வனப்பகுதிக்குள் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 3 பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என வனத்துறை பொய் குற்றச்சாட்டைத் தெரிவிக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும்" என்று கட்டமாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்