

அமெரிக்காவின் புரூக்ளினைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக இறுக்கமாகக் கட்டியணைத்து, பின்னர் அந்த சிறுமியிடம் "தனக்கு ஒரு லத்தீன் மனைவி வேண்டும்" என்று தகாத முறையில் கூறி, அன்றிரவு தன்னோடு தங்குமாறு கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குற்றவியல் புகாரின்படி, 41 வயதான எமில் அகரோனோவ், ஜூலை 28 அன்று காலை சுமார் 10 மணியளவில், ஒரு கடைக்குள் நுழைந்து, அந்தச் சிறுமியிடம் தன்னை கட்டியணைக்குமாறு அருவருக்கத்தக்க முறையில் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுமி தயங்கியுள்ளார். ஆனால் அகரோனோவ் அது எதையும் கண்டுகொள்ளாமல் அச்சிறுமியை மிகவும் இறுக்கமாக கட்டியணைத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் தனக்கு ஒரு லத்தீன் மனைவி வேண்டும் என்று அருவருப்பான முறையில் கூறி, அன்றிரவு தன்னுடன் தங்குமாறு அருவருக்காதக்க முறையில் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிணை வழங்க இயலாது என்பதால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் மேற்பார்வையின் கீழான விடுதலைக் கோரிக்கையை ஏற்று, அகரோனோவ் வியாழக்கிழமை இரவு நீதிமன்றத்தில் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த ஆசிரியர் உடனடியாக வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவரைப் பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், அந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மற்றவர்களும் தைரியமாக முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன், நியூயார்க் நகர காவல்துறை அகரோனோவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்