க்ரைம்

“கண்மாயில் இருந்த சடலம்” - வயலுக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. சடலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கல்!

கால்நடைகளை தேடி வந்த பர்வீன் பானுவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் பின்னர் சடலத்தை

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே உள்ள காரணியானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜலாலுத்தீன். இவருக்கு திருமணமாகி 40 வயதில் பர்வீன் பானு என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜலாலுத்தீன் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். எனவே பார்த்த பானு தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

எனவே கால்நடைகளை மெய்தும் விவசாய செய்தும் தனது மகள்களை காப்பாற்றி வந்த பர்வீன் பானு கடந்த (ஜூலை 14) தேதி மாலை வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் பர்வீன் பானு வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பர்வீன் மகள்கள் தங்களது தாயை தேடி வயலுக்குச் சென்றுள்ளனர். பர்வீன் பானு அங்கு இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பர்வீன் பானுவை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் (ஜூலை 15) ஆம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கண்மாயில் பர்வீன் பானு சடலமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தின் மீது பெரிய கல்லும் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பர்வீனின் மகள்கள் மற்றும் ஊர்மக்கள் இது குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பர்வீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்துள்ளனர். பர்வீனின் உடலை எடுக்க மறுத்து ஊர் மக்கள் மற்றும் பர்வீன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டதோடு கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும், உயிரிழந்த பர்வீன் பானுவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை ஏற்ற அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் உயிரிழந்த பர்வின் பானுவின் மகளுக்கு அரசு வேலை வழங்க வழிவகை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதான காளிதாஸ் என்பவர் (ஜூலை 14) தேதி வயல் பகுதியில் கால்நடைகளை தேடி வந்த பர்வீன் பானுவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் பின்னர் சடலத்தை கண்மாயில் போட்டு சடலத்தின் மீது கல் வைத்து தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது.

பர்வீன் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காளிதாஸை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வயலுக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.