
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான விஜய். இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியான வித்யா மந்திர் பள்ளியில் பள்ளி வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குழந்தைகளை ஏற்றிக்கொண்டு விஜய் புதுச்சத்திரம் அடுத்த ஏளுர் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம், அதே போல் இன்றும் விஜய் பள்ளி குழந்தைகளை பேருந்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.
அப்போது ஏளுர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த தனது மினி சரக்கு லாரியை இயக்கியுள்ளார். இதனால் விஜய் இயக்கிய பேருந்தும் அரவிந்த் இயக்கிய மினி சரக்கு லாரியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகனத்தை நிறுத்திய இருவரும் அவரவர் வாகனத்தின் உள்ளே இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய வாகனத்தை விட்டு இறங்கிய இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அரவிந்த் விஜய்யை போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே நிலை குலைந்து உயிரிழந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அரவிந்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசாருக்கும் விஜய்யின் குடும்பத்தாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்ற போது, அங்கு வந்த விஜயின் குடும்பத்தினர் அவரது உடலை எடுக்க முடியாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் பிடித்து வைத்திருந்த அரவிந்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் வாகனம் இடித்து கொண்ட தகராறில் ஒருவர் மற்றொருவரை பள்ளி குழந்தைகள் முன் வைத்து சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.