க்ரைம்

“அப்பாவின் நண்பரா?”- 15 வயது சிறுமியை சீரழித்த 50 வயது நபர்.. குடும்பமே அறியாத 8 மாத கர்ப்பம்!

அங்கு வந்த தந்தையின் நண்பரான மணி என்ற அந்த நபர்,

Muthu Lakshmi

கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பாட்டி வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் தனியாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால், சிறுமி தனது விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் சென்று, அவருக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு கவனித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். சிறுமி தந்தையின் நண்பரான மணி (வயது 50) என்பவர் கொளப்பலூர் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். 

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறுமி வழக்கம் போல் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு வந்த தந்தையின் நண்பரான மணி என்ற அந்த நபர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கட்டாயப்படுத்தி, அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து பெற்றோரிடமோ அல்லது வெளியில் யாரிடமாவது கூறினால், சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, கொடூர சம்பவத்தை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்தது அவருக்கு தெரியவில்லை, பெற்றோர்களும் அதைச் சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு, சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் அவரை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார்; மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர்.

மேற்படி மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், சிறுமி பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் தேவகி என்பவர், கடந்த மே 7ஆம் தேதி பெருந்துறை மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடி விரிவான விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒர்க் ஷாப் நடத்தி வரும் மணி என்பவர் சிறுமியை மிரட்டி சீரழித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சமூகப் பணியாளர் தேவகி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று முறைப்படி புகார் அளித்தார். புகாரின் பேரில், கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலை மறைவாக இருந்த குற்றவாளி மணியை (50) போக்சோ பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.