சிங்கப்பூரில் உள்ளூர் சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த சமயத்தில், அங்குப் பணியமர்த்தப்பட்டிருந்த 20 வயது செவிலியர் மாணவியான ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 60 வயது சிங்கப்பூர் நபருக்கு, நவம்பர் 12 அன்று 4,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், செவிலியருக்கு இழப்பீடாக 1,000 சிங்கப்பூர் டாலர் செலுத்த உத்தரவிடப்பட்டதோடு, அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பெண்ணின் அடையாளத்தையும், சுகாதார நிலையத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் டான் (குற்றவாளி), கடந்த மே 19 அன்று காலை சுமார் 9:39 மணியளவில் அந்தப் பெண்ணை நோக்கித் தள்ளுவண்டியில் சென்று, அவரது பின் பக்கத்தில் அடித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் திரும்பிப் பார்த்த பிறகு டான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் டான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சட்டப்படி, பாலியல் சீண்டல் குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம், அல்லது அத்தகைய தண்டனைகளின் ஏதேனும் ஒன்று சேர்ந்து வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பிரம்படியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்