க்ரைம்

60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. 23 வயது இளைஞர் கைது! தலைக்கேறிய கஞ்சா போதையால் வெறிச்செயல்

இதைப்பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மூதாட்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

Muthu Lakshmi

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி. இவர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த இளைஞர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது மூதாட்டி கதவை திறந்தவுடன் அவரது வாயை பொத்தி உள்ளே தள்ளி கதவை மூடிக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு இதைப்பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மூதாட்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் தலைக்கேறிய கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு அவரை வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதையடுத்து இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது ஆற்காடு அடுத்த அத்திதாங்கள் கிராமத்தை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி ‌(23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இளைஞர் தக்ஷிணாமூர்த்தியை பிடித்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மாவட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் இளைஞரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்த தக்ஷிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 60 வயது மூதாட்டி என்றும் பாராமல் கஞ்சா போதையில் 23 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.