"உனக்கு ஒரு சர்பிரைஸ்.." காதலனோடு ஹோட்டலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 26 வயது பெண்! கொலையா? தற்கொலையா? - போலீசார் விசாரணை

குக்கட்பள்ளியில் உள்ள கிங்ஸ் அண்ட் குயின்ஸ் கிளப்பில் நடனக் கலைஞராக இருந்தவர் ரேணுகா.
Hyderabad woman death
Hyderabad woman deathHyderabad woman death
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில், 26 வயது பெண் ஒருவர் வியாழக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என காவல்துறை தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் தகவல்படி, இறந்தவரான ரேணுகா, வியாழக்கிழமை மாலை தனது காதலன் ஃபாரூக்குடன் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். குக்கட்பள்ளியில் உள்ள கிங்ஸ் அண்ட் குயின்ஸ் கிளப்பில் நடனக் கலைஞராக இருந்தவர் ரேணுகா. இவர் போலாராமைச் சேர்ந்தவர் என்றும், இதற்கு முன்பு முகாபௌலியில் வசித்து வந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. ரேணுகாவிற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மேலும், அவருக்கு ஏழு வயது மகன் ஒருவன் இருக்கிறார். ஆனால் தற்போது அவர் தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

லாங்கர் ஹவுஸ் காவல்துறையின் தகவல்படி, ரேணுகாவும் ஃபாரூக்கும் ஒரு மதுபான விடுதியில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து, லாங்கர் ஹவுஸ் காவல்துறை கூறியது, "அவருக்கும் அவருடைய காதலன் ஃபாரூக்கிற்கும் இடையேயான உறவு, அவர்கள் ஒரு மதுபான விடுதியில் சந்தித்த பிறகு தொடங்கியது. மேலும் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஒன்றாக இருந்து வந்துள்ளனர். மேலும், அவர் கோல்கொண்டா பகுதியில் வசிக்கிறார். நேற்று, (ஜூன் 3) அவர்கள் 'வி கிராண்ட்' ஹோட்டல் அறைக்கு வந்துள்ளனர்." ஹோட்டலில் செக்-இன் செய்த பிறகு, இருவரும் பிரியாணி ஆர்டர் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஃபாரூக் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில், ரேணுகா அவரின் மற்றொரு தோழிக்கு வீடியோ கால் செய்து, அடுத்த நாள் தனது பிறந்தநாள் என்றும், "உனக்காக ஒரு பிறந்தநாள் பரிசு வைத்திருக்கிறேன்" என்றும் கூறியுள்ளார் . பின்னர் அவர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை கூறியுள்ளது. கோல்கொண்டாவைச் சேர்ந்த ஃபாரூக்கிற்குத் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீசார் ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். "இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாங்கள் அப்புறப்படுத்தியுள்ளோம், மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com