Child murder conviction 
க்ரைம்

"நண்பனின் வீட்டில் தங்கிய 8 வயது சிறுவன்.." கொடூரமாக சீரழித்து கொலை செய்த தந்தை! தொடர் பாலியல் குற்றவாளி சிக்காதது எப்படி?

தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் என்றும், இதுவரை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருந்தார்

Vinvizhi Leninton

8 வயது சிறுவன் ஒருவர் அவரது நண்பனின் தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறுவனின் நண்பனும் அதே அறையில் உள்ள அடுக்கு படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​இச்சம்பவம் நடந்துள்ளாதாக கூறப்படுகிறது.

8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக தற்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். மேலும், பெயர் வெளியிடப்படாத அந்த நபர் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர் என்றும், இதுவரை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் நீதிமன்றம் தற்போது அறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்குக் மட்டுமின்றி, மற்றொரு பாலியல் வன்கொடுமைக்காகவும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இந்தத் தண்டனைக் காலங்கள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2023 ஜூன் 15 அன்று தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தபோது, ​​அந்த 8 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்தை நெரித்துக் கடித்து கொல்லப்பட்டார் என்பது மேற்கு கேப் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசியப் பதிவேட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கும், துப்பாக்கி வைத்திருப்பதற்கும் நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டேனியலின் தாயாரான மரியா ஜாம்னெக்கிற்கு, குற்றவாளி எப்போதாவது விடுதலைக்குத் தகுதி பெற்றால், பரோல் வாரியத்திடம் முறையிடுவதற்கான உரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.