க்ரைம்

"போனில் இருந்த 8000 அந்தரங்க வீடியோக்கள்" - 50க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி விபச்சாரம்.. யார் இந்த TVK மணிகண்டன்?

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய மணிகண்டன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்து தனியாக வசித்து வரும் அந்த பெண் குடும்ப தேவைகளுக்காக அவ்வப்போது தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அவ்வாறு ஒரு நிறுவனத்தில் அந்த பெண்ணுக்கு கடன் பெற்று தருவதில் மணிகண்டன் உதவியதாக சொல்லப்படுகிறது. எனவே இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் அவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணை வெளியில் அழைத்து செல்வது, இருவரும் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவது மற்றும் அவ்வப்போது தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் அவ்வாறு தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வாய்த்த மணிகண்டன் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த பெண்ணை அவரது நண்பர்களுடன் தனிமையில் இருக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண் மணிகண்டனின் போனை பார்த்த பொது அவரது போனில் 8000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் இருந்துள்ளது.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணை அவரது வீடியோவை டெலிட் செய்துவிட்டு இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்தின் ஊழியரிடம் தெரிவித்து நிலையில் போலீசாரிடம் புகாரளித்திருக்கிறார். இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் சில பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளது. அவரால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவரை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, ஒசூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் தவெகவை சார்ந்தவர் என கூறப்படும் நிலையில் அவருக்கும் தவெகவிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டன் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என சொல்லிக்கொள்ளும் நிலையில் அவர் முன்னதாக திமுகவில் இருந்தார் என சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.