சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா - சுரேஷ் தம்பதியர் இருவரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர், இவர்களுக்கு கணேஷ் (14) மற்றும் பாக்கியராஜ் (11) என் இரு மகன்கள் உள்ளனர். சுரேஷ் 37 வயதான இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகன் கணேஷ் 9ஆம் வகுப்பும், இளைய மகன் பாக்கியராஜ் 6ஆம் வகுப்பும் படித்து வருவதாக கூறப்படுகிறத. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். மூத்த மகன் கணேஷ் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு கோடை விடுமுறையில் ஜூன் மாதம் பள்ளி தொடங்கியிருப்பதால் 10ஆம் வகுப்பிற்காக டியூஷன் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் ஜெயாநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் “தனியார் டியூஷன் சென்டரில்" 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி நடத்தப்பட்டு வந்து நிலையில் கணேஷ் அங்கு படிக்கச் சென்று வந்துள்ளார். இதையடுத்து நேற்று 15ஆம் தேதி டியூஷன் முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக டியூஷன் சென்டரில் உள்ள படிக்கட்டில் செல்வதற்காக கீழே இறங்கியபோது பால்கணியில் நின்று சாலையில் சென்ற ஒரு நபருக்கு டாடா கட்டிவுள்ளார், அப்பொழுது பால்கனியை ஒட்டியபடி மிக அருகில் இருந்த உயர்மின் அழுத்தம் கொண்ட மின்கம்பி மீது தவறுதலாக கணேஷ் கைப்பட்டுள்ளது.
அவரது கை “உயர்மின் அழுத்த மின்கம்பியில்” பட்டதும் அவர் மீது மின்சாரம் பாய்ந்து பால்கனியில் இருந்து சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலரின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாக்கம் போலீசார், சித்தாலப்பாக்கம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அப்பகுதிகள் மின்சார இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவன் கணேஷின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று வீடு அல்லது கட்டிடத்தின் பக்கத்தில் ஆபத்தான வகையில் செல்லக்கூடிய மின்சார கம்பிகளில் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டிடத்தின் உரிமையாளர் அல்லது “மின்வாரிய அதிகாரிகள்” பிளாஸ்டிக் பழுப்புகளை பாதுகாப்பிற்காக பொருத்துவது வழக்கம். ஆனால் கணேஷ் படிக்கும் தனியார் டியூஷன் சென்டர் கட்டிடத்தில் உள்ள பால்கனியை ஒட்டி இருந்த “உயர்மின் அழுத்த” கொண்ட மின்சார கம்பிகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது சிறுவன் உயிரிழந்துள்ளதற்கு காரணம் என சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசிடம் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தனியார் டியூஷன் சென்டருக்கு வந்த பள்ளி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. டியூஷனுக்கு சென்ற சிறுவன் கணேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களிடையே மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.